21st February 2023 20:30:45 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைபிரிவின் 542 வது காலாட் பிரிகேட்டின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்று நன்கொடை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த அனுசரணையுடன், மன்னாரில் அமைந்துள்ள தம்பபன்னி சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் பன்னிவெட்டுவான் ஆரம்ப பாடசாலையில் சனிக்கிழமை (18 பெப்ரவரி) மதிய உணவு உபசரிப்புடன் 34 மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பன்னிவெட்டுவான் ஆரம்ப பாடசாலையில் நடைபெற்ற விழாவில், வழங்கப்பட்ட அத்தியாவசிய பாடசாலை பொருட்கள் மற்றும் பரிசுப் பொதிகள் ஒவ்வொன்றும் தலா 5,000.00. ரூபா பெருமதியானவையாகும். இத்திட்டத்தின் மொத்த செலவு 170,000.00 ரூபா நன்கொடை தொகையினை டிஎஸ்ஐ தனியார் நிறுவனம், சலோடா இன்டர்நேஷனல் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனம் என்பன இதற்கான நிதியுதவிகளை வழங்கின.
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட, 542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பம்பரதெனிய, மற்றும் 542 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் தர்மசூரிய, ஆகியோர்களின் வழிகாட்டலின் கீழ் 542 வது காலாட் பிரிகேடின் படையணியினரால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 54 வது காலாட் படைப்பிரிவு தளபதி கலந்துகொண்டதுடன், நன்கொடை நிறுவனங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள் மற்றும் இரு பாடசாலைகளின் ஆசிரியர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பங்கேற்றினர்.