Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th March 2023 05:25:13 Hours

கேகாலை படையினரால் நகரப் பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 611 வது காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை சிங்கப் படையினர் திங்கட்கிழமை (13) பிற்பகல் பரவிய தீயை அணைக்க உதவினர். கேகாலை நகரின் ரன்வெல்ல சந்திக்கு அருகில் உள்ள இரண்டு தற்காலிக வீடுகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 8 வது இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 15 சிப்பாய்கள், மாவனல்லை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் கேகாலை பொலிஸ் அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைவாக பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான பணிகளை ஆரம்பித்தனர். மேலும் சில மணி நேரங்களுக்குள் மற்ற பகுதிகளுக்கு அதிக சேதம் ஏற்படுத்த முன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ எரகொட மற்றும் 8 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஎ ஏக்கநாயக்க ஆகியோர் இணைந்து மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.