15th March 2023 19:50:24 Hours
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் மேலும் ஒரு சமூக நலத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரிகேட் தலைமையகத்தில் சேவையாற்றும் படையினர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 67 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகித்தனர்.
பிரிகேட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) நடாத்தப்பட்ட விநியோகத்தின் போது, ஒவ்வொரு பிள்ளைக்கும் சுமார் 3500/= ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களின் பொதி வழங்கப்பட்டது. ஜேர்மனியை வசிப்பிடமாக கொண்ட திருமதி நிலாந்தி ஜோஹாம் அவர்கள் வழங்கிய ஆதரவினால் படையணியில் உள்ள படையினர்களின் பிள்ளைகளுக்கு ஊக்கத் தொகை விநியோகிக்கப்பட்டன.
221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சுஜீவ ரத்நாயக்க, சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவாக இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். 221 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி மேஜர் ஏடி குணரத்ன அவர்கள் இந்த திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.