Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th March 2023 21:20:22 Hours

மதகுருமார்களின் ஆதரவுடன், படையினர் கெபித்திகொல்லேவ மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கல்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது காலாட் படைப்பிரிவின் 623 வது காலாட் பிரிகேட் படையினர் தரம் 1-5 வரையில் கல்வி கற்கும் 88 பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதலும், கெபிதிகொல்லாவ பிரதேச 6 ஆசிரியர்களுக்கு விசேட சேவைக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வினை கனுகஹவெவ ஆரம்பப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 14 ) முன்னெடுத்தனர்.

தலா 5000/= ரூபா பெறுமதியான ஒவ்வொரு பொதியும் வண. ஒஸ்மான் டி அல்விஸ், வண. லூக் ஜுன்சன், வண. ரிச்சர்ட் ஜெயக்குமார், வண. லசந்த ஜயலத் ஆகியோரின் அனுசரணையில், 11 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விநியோகத்தின் போது நன்கொடையாளர்கள், குருமார்கள், பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், 623 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ரஞ்சித் புதகொட, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.