22nd March 2023 09:46:25 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 57 வது காலாட் படைப்பிரிவின் 573 வது காலாட் பிரிகேட் படையினர் கிளிநொச்சி பாரதிபுரம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 50 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கும் செயற்திட்டமொன்றை மார்ச் 17 ஆம் திகதி 9 வது விஜயபாகு காலாட் படையணியின் தலைமையகத்தில் முன்னெடுத்தனர்.
அத்தனகல்ல ரஜமஹா விஹாரையின் வண. புகென்தயாயே சந்தரதன தேரர் ‘லக்தரு யாத்ரவ’ அமைப்பின் ஒருங்கிணைப்புடன் இந்நிகழ்வுக்கு தேவையான நிதியுதவியை வழங்கினார்.
9 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், 573 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன மற்றும் 9 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநியோகத்தின் வெற்றிக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.
நன்கொடையாளர்களின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர , 573 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர் அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாரதிபுரம் வித்தியாலய அதிபர் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.