Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2023 09:55:21 Hours

புத்தல இராணுவ போர் கல்லூரி 3 மொனராகலை பாடசாலைகளுக்கு உதவி

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் நிதியுதயில் புத்தள இராணுவப் போர்க் கல்லூரி மொனராகலை மூன்று பாடசாலை 238 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கியது. 238 மாணவர்களுக்கு தலா 3500.00 ரூபா பொறுமதியான உபகரண பொதிகளை 14 மார்ச் 2023 வழங்கியது. 'அத்த ஹித்த' அறக்கட்டளை இதற்கான நிதியுதவி வழங்கியது. இதற்கான நிதியுதவியை இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி ஊழியர்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தார்.

நன்கொடையாளர் திரு பிரசாத் லொகுபலசூரிய அவர்களின் தலைமையிலான 'அத்த-ஹித்த 2023' திட்டமானது, மொனராகலை கோனகன் ஆரா கனிஷ்ட வித்தியாலயத்தில் பயிலும் மாணவர்களுக்கு 121 உபகரண பொதிகளையும், மொனராகலை மஹகொட யாயவில் உள்ள ஜனஷங்க மாதிரி பாடசாலை மாணவர்களுக்கு 79 உபகரண பொதிகளையும், மொனராகலை தெரேலா கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 38 உபகரண பொதிகளையும் வழங்கிவைத்தனர்.

இந்நிகழ்வில் இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் மானத யஹம்பத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்த நன்கொடை நிகழ்வில் இராணுவப் போர்க் கல்லூரியின் பிரதித் தளபதி பிரிகேடியர் சமன் சேனாரத்ன அவர்களும் கலந்துகொண்டார். இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட அதிகாரிகள், பணியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவ அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.