22nd March 2023 21:40:55 Hours
15 வது இலங்கை பீரங்கி படையணி படையினர் நோயாளிகள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உதவும் நோக்கில் திங்கட்கிழமை (மார்ச் 20) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ரூ.120,000.00க்கும் அதிக பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.
14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 142 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 15 வது இலங்கை பீரங்கி படையணியின் 3 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 15 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டப்ளியூ ஏ எஸ் எம் விஜயலத் அவர்களால் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. இப் பொதிகளில் அரிசி, பருப்பு, நூடுல்ஸ் போன்றவை இருந்தன. 15 வது இலங்கை பீரங்கி படையணி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், நலன் விரும்பிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்யும் குடும்ப உறுப்பினர்களால் நிதியுதவியளிக்கப்பட்டது. மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி இத்திட்டத்திற்கான வழிகாட்டுதல்களையும் ஒப்புதலையும் வழங்கினார்.
15 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி , சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முன்னிலையில் மருத்துவமனை அதிகாரிகளிடம் பொதிகளை ஒப்படைத்தார்.