26th March 2023 22:15:13 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 12 வது காலாட் படைப்பிரிவின் 122 வது காலாட் பிரிகேடின் 23 வது கஜபா படையணியின் படையினரின் உதவியுடன் சிவில் சமூகம் சார்ந்த நலன்புரி திட்டத்திற்கு அமைய இலவச பாடசாலை பைகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் திட்டத்திற்கு அமைய கிரிந்தகம ஆரம்பப் பாடசாலையின் 150 மாணவர்களுக்கு தலா ரூ. 5,500.00 பெறுமதியான பொருட்கள் வழங்கும் நிகழ்வு (மார்ச் 24) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இத் திட்டம் அனுசரனையாளர்களின் அனுசரனை மூலம் மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரின் ஒருங்கிணப்பில் முன்னெடுக்கப்பட்டது. 122 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நதீக குலசேகர அவர்களின் வழிகாட்டலின் கீழ் 23 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஏஎஸ் குணவர்தன அவர்களினால் 12 வது படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் மிஹிது பெரேராவின் ஆசிர்வாதத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
கிரிந்த பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 மாணவர்கள் பயன்பெறும் நலன்புரித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க தனது ஒத்துழைப்பை வழங்கினார்.
122 வது காலாட் பிரிகேட் தளபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் அதிபர் , ஆசிரியர்கள், 23 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.