02nd April 2023 22:26:54 Hours
லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இராணுவத்தின் பாடசாலை மறுமலர்ச்சித் திட்டத்தைத் தொடர்ந்து, 143 வது காலாட் பிரிகேடின் 1 வது தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் கிரியுல்ல மத்தேபொல ஆரம்பப் பாடசாலையில் இரண்டு கட்டிடங்களை புனரமைத்து 28 மார்ச் 2023 அன்று பாடசாலை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
பாடசாலையின் கோரிக்கையை அடுத்து லயன்ஸ் கழகம் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல, 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிட்ச்சிலன் மற்றும் 1 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கேஎஎஸ்பீ குமார ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இராணுவ வீரர்கள் புனரமைப்பு மற்றும் சேதமடைந்த இரண்டு கட்டிட சுவர்களுக்கும் வர்ண்ணங்கள் பூசினர்.
இதேவேளை, அதே திட்டத்திற்கு இணையாக, பாடசாலை விளையாட்டு மைதானமும் லயன்ஸ் கழகத்தினால் மீளவும் புனரமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரண்டு திட்டங்களுக்கும் தேவையான பொருட்கள் மற்றும் நிதியுதவியை லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.
பாடசாலை ஊழியர்களின் அழைப்பின் பேரில், 143 வது காலாட் பிரிகேட் தளபதி, 1 வது தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி, அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் லயன்ஸ் கழகத்தின் அதிகாரிகள், புதுப்பிக்கப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு மைதானத்தை மீண்டும் திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.