04th April 2023 17:15:32 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைபிரிவின் 144 வது காலாட் பிரிகேடின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் அக்குரேகொடவில் உள்ள 'அபினாவாராம' விகாரை பொறுப்பதிகாரி வண.கபுகம தம்மவம்ஷ தேரரின் வேண்டுகேளுக்கமைய விகாரையின் புனரமைப்பு மற்றும் பிக்குகளின் வாஸ்ஸத்தலங்களுக்கு வர்ணம் பூசல் மற்றும் 'போதியா'வைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவர்களைச் சுத்தம் செய்தல் போன்ற பணிகளை 2023 ஏப்ரல் 02 அன்று செய்தனர்.
144 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 10 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி கட்டளை அதிகாரி ஆகியோரின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் வழிகாட்டலின் பேரில் ஒரு அதிகாரியும் பத்துப் படையினரும் பிக்குவின் ஆலோசனையில் இத் திட்டத்தை மேற்கொண்டனர்.விகாரையில் வசிக்கும் பிக்குகள், பொதுமக்கள் மற்றும் ஒரு மாணவர் குழு விருப்பத்துடன் திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்தனர்.