04th April 2023 17:45:32 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் அமெரிக்கா 'ஸ்டேட் ஐலண்ட் பௌத்த மையத்தின்' வண.கும்பலொலுவ விமலஜோதி தேரரின் அனுசரணை மூலம் ரூபாய் 3 மில்லியன் பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் மற்றும் கணனிகளை வழங்கங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் படையினரின் ஏற்பாட்டில் மாத்தளை மாவட்டத்தின் கும்பலொலுவ - உடவல கிராமப் பகுதிகளில் வசிக்கும் 120 பாடசாலை மாணவர்களுக்கு ஏப்ரல் 2 (ஞாயிற்றுக்கிழமை) உடவ ஸ்ரீ போதியங்கனராம விகாரையில் ஆறு கணினிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களைப் விநியோகித்தனர்.
11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹார அமெரிக்காவில் உள்ள நன்கொடையாளர் பிக்குவுடன் இணைந்து இந்த திட்டத்தை ஒருங்கிணைத்தார். அந்தந்த பாடசாலை அதிகாரிகள் மற்றும் கிராமசேவை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கதாகும்.
இந் நிகழ்வில் 11 வது காலாட் படைபிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.