06th April 2023 18:45:43 Hours
52 வது காலாட் படைப்பிரிவின் படையினர் இந்து ஆன்மீக வழிபாடுகளுக்கு உரிய அங்கீகாரம் அளித்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் விழாக்களை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 04) எழுதுமட்டுவாழ் வடக்கில் உள்ள ஸ்ரீ ஞானதுர்கை அம்மன் கோவில் வளாகத்திற்குள் தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை நடாத்தினர்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்களின் ஆசிர்வாதத்துடன் 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ் நல்லிணக்கத்தின் ஒரு அம்சமாக இந்த திட்டம் கோவில் நிர்வாக சபையுடன் கலந்தாலோசித்து முன்னெடுக்கப்பட்டது.
52 வது காலாட் படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பக்தர்களுடன் சேர்ந்து குப்பைகளை சேகரித்து, புனித இடத்தில் சுவர்களை கழுவி, பிரசாதம் வழங்குவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் முன் வளாகத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருக்கும் பொருட்டு திட்டத்தை முன்னெடுத்தனர்.