12th April 2023 06:07:08 Hours
3வது இலங்கை இராணுவப் பொலிஸ் சேவை படையணி 32வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனுராதபுரம் றியன்சி அழகியவண்ண விசேட பாடசாலையில் வசிக்கும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு 22 மார்ச் 2023 அன்று விசேட மதிய உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்கியது.
ஆண்டு நிறைவு நாளில் (மார்ச் 27) இராணுவ மரபுகளுக்கு இணங்க, 3வது இலங்கை இராணுவப் பொலிஸ் சேவை படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்டிஎஸ்யுகே வீரசிங்க அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் அவருக்கு இராணுவத்தின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அனைத்து நிலையினருடன் மதிய விருந்திலும் கலந்து கொண்டார். மேலும் ஒரு இசை நிகழ்ச்சி பின்னர் அன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன.