12th April 2023 21:43:21 Hours
திருகோணமலை மாவட்டத்தில் சிவில்-இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை ஏப்ரல் 9 ஆம் திகதி திருகோணமலை கோட்டை பிரட்ரிக் மைதானத்தில் நடாத்தினர்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுடன் தொடர்புடைய பாரம்பரிய மற்றும் வேடிக்கையான அம்சங்களில் 22 வது படைப்பிரிவின் கட்டளையின் கீழ் பொதுமக்கள் மற்றும் படையினர் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
பல சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய நிகழ்வுகள், கயிறு இழுத்தல், 'அவுருதுகுமாரி' (புத்தாண்டு இளவரசி) தேர்வு, யானைக்கு கண் வைத்தல், பனிஸ் சாப்பிடுதல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், மரதன் ஓட்டம், ஆகிய ஏனைய விளையாட்டுகளுடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
22 வது காலாட் படைப்பிரிவின் 221 வது காலாட் பிரிகேடின் வழிகாட்டுதலின் கீழ் 2 வது (தொ) கஜபா படையணி மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் 222 மற்றும் 223 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், 22 வது காலாட் படைப்பிரிவின் படையினர் மற்றும் திருகோணமலை ஐஓசி யின் உப தலைவர் திரு.தேபன்ஜன் முகர்ஜி மற்றும் பிரதேசத்தின் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.