18th March 2023 21:10:22 Hours
படையினரின் நலன் கருதி 231 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தினால் மட்டக்களப்பு கல்லடி 23 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சிறு நலன்புரி நிலையம், சிற்றுண்டிச்சாலை மற்றும் சிகையலங்கார நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல வசதிகள் கொண்ட கட்டிடமானது புதன்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.
231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 231 வது காலாட் பிரிகேடினர் இந்த வசதி கொண்ட கட்டிடத்தை நிர்மாணித்தனர். 231 வது காலாட் பிரிகேட் தளபதியினால் படையினரின் முன்னிலையில் நாடா வெட்டி, பதாதையை திரைநீக்கம் செய்து திறந்து வைத்தார். 231 வது பிரிகேடின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.