26th March 2023 20:20:57 Hours
நிரந்தரமாக காயமடைந்த போர்வீரர்களுக்காக பங்கொல்ல 'அபிமன்சல 3' ஆரோக்கிய விடுதியில் இல் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் வியாழக்கிழமை (மார்ச் 23) புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரோன் ஏக்கநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி ஓமா உபமாலிகா விஜேகுணரத்ன அவர்களால் வழங்கப்பட்ட அனுசரணையில் ரூ.500,000 செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டத்தின் ஆரம்ப விழாவை ஒட்டி, 'அபிமன்சல 3'ல் பணிபுரியும் சிவில் ஊழியரட ஒருவருக்கும் உயிர் நீத்த ஒரு போர் வீரனின் மனைவிக்குமாக இரண்டு செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. ஆரோக்கிய விடுதியில் சேவை செய்யும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொடக்க நிகழ்ச்சியுடன் இணைந்திருந்தனர்.