Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2023 20:03:49 Hours

வன்னி படையினரால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினரால் வருடாந்தோரும் இடம் பெறும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை வியாழன் (06) வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடினர்.இப்புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாரம்பரிய, வேடிக்கையான அம்சங்கள் மற்றும் கிராமப்புற விளையாட்டுகள், மரதன் ஓட்டம், வழுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல் போன்றவை அடங்கும். மேலும், கிராமத் தலைவரின் மாதிரி வீடு (ஆரச்சிலாகே வளவ்வ), கிராமப்புற வீடு (கெமி கெதர), கடை வீதி (கடமண்டிய) மற்றும் பல பாரம்பரிய அம்சங்களால் வண்ணமயமாக்கப்பட்டிருந்தது.

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 21, 54, 56, 62 மற்றும் 65 வது காலாட் படையணிகள், வட மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பகுதி, காலாட் பிரிகேட்கள் மற்றும் பல்வேறு படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் புத்தாண்டு விழாவில் பங்குபற்றினர்.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் கலந்து கொண்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.