02nd April 2023 22:06:00 Hours
ம்பாறை காலாட்படை பயிற்சி பாடசாலையில் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் - 100ஐ நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 31) காலாட்படை பயிற்சி பாடசாலையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆதிகாரவனையற்ற அதிகாரிகளை இராணுவத்தில் பயிற்றுவிப்பாளர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் 70 ஆண் மற்றும் பெண் ஆதிகாரவனையற்ற அதிகாரிகள் பங்கேற்றனர். பாடநெறியில் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதுடன் பாடநெறி 09 ஜனவரி 2023 அன்று பயிற்சி தொடங்கியது.
அம்பாறை காலாட்படை பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் ருவான் முனிபுர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றியதோடு பாடநெறியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பாராட்டுச் சின்னங்களை வழங்கினார்.
1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் டி ஜி கே எஸ் குணவர்தன தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்றுடதுடன் அம்பாறை காலாட்படை பயிற்சி பாடசாலை தளபதியினால் விசேடமாகப் பாராட்டப்பட்டார்.