27th March 2023 23:38:56 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க அவர்களின் மேற்பார்வையில் திங்கட்கிழமை (மார்ச் 27) பம்பைமடு படையலகு பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் மேலதிக படைக்குழு பாடநெறி-04 அண்மையில் நிறைவு பெற்றது.
10 படைக்குழுக்களின் பங்குபற்றுதலுடன் 2023 பெப்ரவரி 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சியானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21, 54, 56, 62, மற்றும் 65 வது காலாட் படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 10 அதிகாரிகள் மற்றும் 250 சிப்பாய்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பாடத்திட்டத்தின் ஜிபீஎஸ், ஆயுதமற்ற கள நடவடிக்கை, விஷேட பிரமுகர் பாதுகாப்பு, துப்பாக்கி சூட்டு தொகுதி (ஆயுதங்களைக் கையாளுதல்) தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், நடைமுறை சட்டங்கள் பற்றிய விரிவுரைகள், சிறப்பு செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் உள்ளக பாதுகாப்பு கடமைகள் நடைமுறை அமர்வுகள் ஆகியவை உள்ளடக்கமாக காணப்பட்டது.
இறுதி நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதற்கு முன்னர் நிறைவு உரையை நிகழ்த்தினார்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி, 562 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரதம பயிற்றுவிப்பாளர் மேஜர் டிஎல்சி ஜயசிங்க அன்றைய பிரதம அதிதியை வரவேற்றார்.
சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறந்த குழு: 4 வது கஜபா படையணி (65 வது காலாட் படைப்பிரிவு)
சிறந்த 8 பேர் கொண்ட குழு: 4 வது கஜபா படையணியின் 2வது பிரிவு (65 வது காலாட் படைப்பிரிவு)
சிறந்த குழு கட்டளையாளர்: இரண்டாம் லெப்டினன் எஎச்எம்என் கவீஷ – 12 வது (தொ) இபீப
அனைத்து பிரிவிலும் சிறந்த சிப்பாய்: சார்ஜென் எல்எம்என்ஆர் லன்சகார - 14 வது இபீப
சிறந்த துப்பாக்கி சுடுதல்: சிப்பாய் ஆர்எம்எஸ்ஐ ரணதுங்க – 14 வது (தொ) இஇகாப
சிறந்த உடற் தகுதி: கோப்ரல் டபிள்யூபிஎம்எஸ். ரத்நாயக்க - 15 வது (தொ) இசிப