Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd March 2023 21:30:18 Hours

காலாட் பயிற்சி நிலையத்தின் படையலகு ஆயுதப் பாடநெறி இல-20 சான்றிதழ் வழங்கல்

மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் 36 சிப்பாய்கள் கலந்து கொண்ட படையலகு ஆயுதப் பயிற்சி பாடநெறி இல-20 செவ்வாய்கிழமை (மார்ச் 21) நிறைவு பெற்றது. இது ஜனவரி 21 அன்று தொடங்கி மார்ச் 21 விருது வழங்கும் விழா வரை தொடர்ந்தது.

இந்நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் வசந்த லியன வடுகே அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி நிறைவுரையாற்றினார். 6 வது கெமுணு ஹேவா படையணியின் கோப்ரல் ஜே.ஏ.டபிள்யூ.டபிள்யூ. பண்டார தகுதி வரிசையில் முதலிடத்தைப் பெற்று தளபதியினால் விசேடமாகப் பாராட்டப்பட்டார்.

இந்த பாடநெறி இராணுவத்தில் பயன்படுத்தப்படும் படையலகு ஆயுதங்களை மையமாகக் கொண்ட தேர்வுகளுடன் கூடிய கோட்பாடு மற்றும் நடைமுறை அமர்வுகளைக் கொண்டிருந்தது. பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய் கலந்து கொண்டனர்.