Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2023 18:39:41 Hours

அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் 'தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டு பாடநெறி இல- 43 நிறைவு

அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் தலைமைத்துவம் மற்றும் தொழில் மேம்பாட்டு பாடநெறி- இல 43 இன் நிறைவு விழாவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (மார்ச் 18) அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் அதன் கட்டளை அதிகாரி கேணல் ஷமல் டி சில்வா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இராணுவத்தின் அனைத்துப் படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, 61 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் ஒரு மாத காலப் பயிற்சியைப் பின்பற்றினர்.

முதலாம் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சார்ஜன் ஐகேஎம்எஸ்எஸ் இளங்கசிங்க அவர்கள் பாடநெறியில் சிறந்த மாணவராக விருது பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.