10th March 2023 18:38:47 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது காலாட் படைப்பிரிவு “பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் மற்றும் தெற்காசிய பிராந்தியம் மற்றும் இலங்கையில் அதன் தாக்கங்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் அமர்வு ஒன்றை புதன்கிழமை (மார்ச் 08) கொகெலிய 56 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் ஏற்பாடு செய்தது.
இந்த அமர்வின் போது, 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்கள் உட்பட 50 அதிகாரிகள் அடங்கிய குழுவிற்கு 08 அதிகாரிகள் விரிவான விளக்கமொன்றை வழங்கினர்.
மேலும், 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள், பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் ஸூம் தொழில்நுட்பம் மூலம் அமர்வில் இணைந்து கொண்டனர்.
இறுதியில், பங்கு பற்றியவர்கள் கேள்வி-பதில் அமர்வில் பங்கேற்றினர்.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சர்வதேச உறவுகள் பற்றிய அதிகாரிகளின் அறிவை கூர்மைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த செயலம்வு முன்னெடுக்கப்பட்டது.