Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th March 2023 18:30:02 Hours

62 வது படைப்பிரிவு காற்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படைப்பிரிவுகளுக்கிடையேயான காற்பந்து சாம்பியன்ஷிப் – 2023, மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவு விளையாட்டு மைதானத்தில் பெப்ரவரி 08 முதல் மார்ச் 10 வரை நடைபெற்றது. இப்போட்டியில் 07 காற்பந்து அணிகள் போட்டியிட்டன.

வெள்ளியன்று (10) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இறுதி போட்டியை பார்வையிட்ட வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களை 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.

இறுதிப் போட்டியில் 56 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 62 வது காலாட் படைப்பிரிவு அணிகள் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டன. 62 வது காலாட் படைப்பிரிவு அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப்பையும் வென்றனர்.

அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழாவில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பரிசில்களை வழங்கினர்.

56 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம், 62 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜனக ரணசிங்க, 65 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, வடமத்திய முன்னரங்கு பராமரிப்பு பிரதேசத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது பின்வரும் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

சாம்பியன்ஷிப் - 62 வது காலாட் படைப்பிரிவு அணி

இரண்டாம் இடம் – 56 வது காலாட் படைப்பிரிவு அணி

சிறந்த வீரர் - லான்ஸ் கோப்ரல் எஸ்எஸ்டி ஹெட்டியாராச்சி – 62 வது காலாட் படைப்பிரிவு அணி

சிறந்த கோல் காப்பாளர் - லான்ஸ் கோப்ரல் ஆர்எம்எஸ் ரத்நாயக்க - 62 வது காலாட் படைப்பிரிவு அணி