12th June 2023 19:14:26 Hours
34 வருடங்களுக்கும் மேலாக நாட்டிற்கு சேவையாற்றி, இலங்கை பீரங்கி படையணியின் அனுபவம் வாய்ந்த துப்பாக்கி சுடும் வீரராகப் போற்றப்பட்ட மேஜர் ஜெனரல் பீடப்ளியுபி ஜயசுந்தர (ஓய்வு) வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி யுஎஸ்ஏசிஜிஎஸ்சி ஐஜி அவர்களின் நல்லடக்கம் இன்று (12) பிற்பகல் பொரளை பொது மயானத்தில் அவரது இராணுவத் தோழர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாபெரும் கூட்டத்தின் மத்தியில் இடம்பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் தோழருக்கு மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்றிருந்தனர்.
முதலில் இராணுவ மரபுகளின்படி படையினர் உடல் தாங்கிய் பேழையை பெற்று, துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியில் போர்த்தப்படுவதற்கு முன்பு மயானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஆயுத மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஸ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை சம்பிரதாயமாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயானத்தை நோக்கிச் சென்றனர்.
இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை I நிகழ்வில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு வணக்கம் செலுத்தி அடையாள துப்பாக்கி வணக்கத்தை வழங்கினர், இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.கடைசி வாசிப்பிற்கு பிறகு, சிரேஸ்ட வீரர் அவரது நித்திய ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பப்பட்டதன் பின்னர் உடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, அவரது புகழ்பெற்ற பணியின் போது, இராணுவத்தில் ஒரு பொதுவான பாரம்பரியமாக மேஜர் ஜெனரல் பீடப்ளியுபி ஜயசுந்தர (ஓய்வு) வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி யுஎஸ்ஏசிஜிஎஸ்சி ஐஜி அவர்களின் குடும்பத்தினருக்கு அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
மறைந்த மேஜர் ஜெனரல் P மேஜர் ஜெனரல் பீடப்ளியுபி ஜயசுந்தர (ஓய்வு) வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி யுஎஸ்ஏசிஜிஎஸ்சி ஐஜி அவர்களின் இராணுவ இறுதிச் சடங்கு, கவச வாகனப் படையணியின் படைத் தளபதியும் பிரதி பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ், இலங்கை பீரங்கிப் படையணியின் பிரதி தளபதியும் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹாரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அந்தி சாயும் போது மறைந்த அதிகாரிக்கு வணக்கம் செலுத்த ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரிகள், முதன்மை பணிநிலை அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள், பணிப்பாளர்கள் மற்றும் பலர் இருந்தனர்.
மேஜர் ஜெனரல் பீடப்ளியுபி ஜயசுந்தர (ஓய்வு) வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி யுஎஸ்ஏசிஜிஎஸ்சி ஐஜி அவர்கள் இராணுவத்தில் ஓய்வு பெற்றதன் பின்னர் மீண்டும் செயல் சேவைக்கு அழைக்கப்பட்டு தேசிய கேடட் மாணவர் படையணி பணிப்பாளராக பதவியை வகித்தார். அவரது சேவை காலத்தில் அவர் இராணுவ செயலாளர், உபகரண பணிபாளர் நாயகம், திட்டமிடல் பணிப்பாளர், 52, 21 மற்றும் 51 காலாட் படைபிரிவுகளின் தளபதி பதவிகளை வகித்தார்.
இறுதிச் சடங்கில் வாசிக்கப்பட்ட சிறப்பு கட்டளை 1 பின்வருமாறு;