Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th March 2023 19:32:45 Hours

இராணுவ சைக்கிள் ஓட்டுனர்கள் விமானப்படை சைக்கிள் ஓட்டபோட்டியில் வெற்றி

இராணுவ சைக்கிள் ஓட்டுநர்கள் குழுவினர் இலங்கை விமானப்படையின் 24 வது விமானப்படை சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றி கொண்டதன் மூலம் தனவசமிருந்த தொடர்வெற்றியை தக்கவைத்துள்ளனர். போட்டியானது சனிக்கிழமை (4) அனுராதபுரத்தில் நிறைவடைந்தது.

இலங்கை இராணுவ சைக்கிள் வீரர்கள் போட்டியின் பலம் வாய்ந்த அணி என்பதை நிரூபித்து மூன்று நிலைகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொண்டனர். அவர்கள் ஆரம்பம் முதலே தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதுடன் மேலும் அவர்களின் திறமையான சவாரி மற்றும் சிறந்த குழுப்பணி அவர்களை வெற்றிக்கு உந்தியது. இலங்கை விமானப்படை அணி நல்ல எதிர்ப்பை வெளிப்படுத்தி அணி சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

கொழும்பு விமானப்படை தலைமையகத்தில் வியாழன் (2) அன்று ஆரம்பித்த 24 வது ‘விமானப்படை சைக்கிள் ஓட்டபோட்டியில் 160 சைக்கிள் ஓட்டுநர்கள் பங்குபற்றினர்.

இப் போட்டிகள் நாடு முழுவதுமுள்ள சைக்கிள் ஓட்டுபவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நிகழ்வாகும். போட்டியின் முதல் கட்டம் கொழும்பில் இருந்து கண்டி வரை 116.7 கிலோமீட்டர் நடைபெற்றது. இராணுவ சைக்கிள் ஓட்டுனர்கள் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துடன் போட்டி முழுவதும் அதைத் தக்கவைத்துக் கொண்ட லான்ஸ் கோப்ரல் துஷான் ராஜபக்ஷ 3 மணி நேர இடைவெளியில் இறுதி தூரத்தினை கடந்தார்.

போட்டியின் இரண்டாவது கட்டம் பல்லேகலையில் இருந்து பொலன்னறுவை வரையிலான 146.7 கிலோமீற்றர் போட்டியில் மீண்டும் இராணுவ சைக்கிள் ஓட்டுநர்கள் ஆதிக்கம் செலுத்தியதுடன் சிப்பாய் சாரங்க பெரேரா 3 மணிநேரம் 43 நிமிடங்களில் போட்டியினை நிறைவு செய்தார்.

இறுதிக் கட்டமாக ஹபரணையில் இருந்து அனுராதபுரம் வரையிலான 132 கிலோமீற்றர் போட்டியில் இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் தரிந்து திசேரா 2 மணித்தியாலங்கள் 59 நிமிடங்களில் வெற்றிபெற்றார். மொத்த தூரம் 395.4 கி.மீ தூரம் கொண்ட இப் போட்டியில் நாடு முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சைக்கிள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர். 9 மணித்தியாலங்கள் 43 நிமிடங்கள் 31 வினாடிகளுக்குள் இலங்கை இராணுவ சைக்கிள் ஓட்டுநர்கள் மொத்தப் போட்டியை நிறைவு செய்து சாம்பியன்ஷிப்பைத் தமதாக்கி கொண்டனர்.

இந்திய விமானப்படை அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் ஒவ்வொரு கட்டத்திலும் முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் சிலர் சிலர் போட்டியை நிறைவு செய்தனர். அவர்களின் பங்கேற்பு நிகழ்வுக்கு ஒரு சர்வதேச பரிமாணத்தை சேர்த்ததுடன் மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவது மகிழ்ச்சியாக இருந்தது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானியும் இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய ஆகியோர் போட்டி முழுவதும் உத்வேகமான ஆதரவை வழங்கினர். இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளரும் இராணுவ சைக்கிள் ஓட்டுதல் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர மற்றும் உப தலைவர் கேணல் மகேஷ் குணசேகர ஆகியோர் விமானப்படை தலைமையகத்தில் ஆரம்ப போட்டி மற்றும் இறுதியாக போட்டி நிறைவடைந்த அனுராதபுரம் சல்காது மைதானத்தில் கலந்து கொண்டனர்.

அனுராதபுரம் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

முடிவுகள் பின்வருமாறு

ஆண்கள் சாம்பியன்ஷிப்

முதல் நிலை வெற்றியாளர் - லான்ஸ் கோப்ரல் துஷான் ராஜபக்ஷ - இலங்கை இராணுவம்

இரண்டாம் நிலை வெற்றியாளர் - சிப்பாய் அவிஷ்க மெடோன்சா - இலங்கை இராணுவம்

மூன்றாம் நிலை வெற்றியாளர் - லான்ஸ் கோப்ரல் தரிந்து திஸ்சேர - இலங்கை இராணுவம்

ஆண்கள் அணி சாம்பியன் - இலங்கை இராணுவ அணி

ஆண்கள் அணி இரண்டாம் இடம் - இலங்கை விமானப்படை

ஒட்டுமொத்த ஆண்கள் சாம்பியன் - லான்ஸ் கோப்ரல் துஷான் ராஜபக்ஷ - இலங்கை இராணுவம்

ஒட்டுமொத்த ஆண்களுக்கான இரண்டாவது இடம் - கோப்ரல் அவிஷ்க மெடோன்சா - இலங்கை இராணுவம்

பெண்கள் சாம்பியன்ஷிப்

ஒட்டுமொத்த பெண்களுக்கான நான்காவது இடம் - லான்ஸ் கோப்ரல் மதுமாலி பெர்னாண்டோ - இலங்கை இராணுவம்

ஒட்டு மொத்த பெண்களுக்கான எட்டாவது இடம் - லான்ஸ் கோப்ரல் ஆகாஷா சந்தமினி - இலங்கை இராணுவம்

ஒட்டுமொத்த பெண்களுக்கான பத்தாவது இடம் - கோப்ரல் உதேஷனி நிரஞ்சனி - இலங்கை இராணுவம்