24th May 2023 23:24:59 Hours
மட்டக்குலி ரொக் ஹவுஸ் இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்எஸ். தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்களுக்கு செவ்வாய்கிழமை (மே 23) இராணுவ சம்பிரதாய மரியாதைகள் மற்றும் வாழ்த்துகள் வழங்கப்பட்டன.
பாரம்பரிய நிகழ்வை சிறப்பித்து நுழைவாயிலில் படையினரால் படையணி தலைமையகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யூஎஸ்பீ என்டிசி அவர்கள் படையினருக்கு ஆற்றிய உரையில், தனது பல அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்கள் நிறைந்த இன்றைய வெற்றிக்கு வழி வகுத்தமைக்காக படையணியில் கடந்த கால மற்றும் தற்போதைய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுவர்ண டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவரது சாதனைக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
படையணித் தலைமையகத்தில் அனைத்து நிலையினருடன் தேனீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிரைவு பெற்றது.