24th May 2023 23:25:59 Hours
30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தின்போது தாய்நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த மன்னார் பிரதேசத்தில் சேவையாற்றிய படையினருக்காக மன்னார் 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள போர்வீரர்களின் நினைவுத் தூபியில் வியாழக்கிழமை (மே 18) மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ ,சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, காயமடைந்த போர்வீரர்கள் விரைவில் குணமடையவும் உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவாக வண. மாத்தோட்ட புராண விஹாரையின் தலைமை தேரர் எம் சங்கரக்கித தலைமையில் 'போதி பூஜை' நிகழ்வும் 'பிரித்' பராயணமும் இடம் பெற்றன. அதனைத் தொடர்ந்து தற்போது சேவையில் உள்ள அதிகாரிகள் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் படைப் பிரிவின் தளபதி உட்பட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.