Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

26th May 2023 11:10:07 Hours

தளபதியின் திட்டத்தின் கீழ் 612 வது காலாட் பிரிகேட் படையினரால் 4 குழந்தையுடைய தாய்க்கு புதிய வீடு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவின் 612 வது காலாட் பிரிகேடின் 12 கள இலங்கை பொறியியல் படையணியின் படையினரால் களுத்துறை, மத்துகம பிரதேச செயலகத்தின் கோபிவத்தை பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர். இத் திட்டமானது மாவட்ட நன்கொடையாளர்களின் ஆதரவுடன் திங்கட்கிழமை (22) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

ஆதரவற்ற நான்கு குழந்தைகளின் தாய் வறுமையில் வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததற்கமைய அப்பகுதியிலுள்ள பல நன்கொடையாளர்கள் மற்றும் அனுசரனையாளர்கள் ஒன்று கூடி, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களைத் தொடர்பு கொண்டு இக் குடும்பத்திற்கு ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கான மனிதவளம் மற்றும் கட்டுமானத் திட்டத்திற்கான உதவி கோரினர்.

இராணுவத் தளபதியின் கிரீன்லைட் திட்டத்தின் கீழ், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் டிடீகே டிரெட் லிங்ஸ் தனியார் நிறுவனம் மற்றும் பல நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் தொழில்நுட்ப உதவியுடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதற்கமைய பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகமும் இந்த திட்டத்திற்கு ரூ. 300,000/=, நிதியுதவி அளித்து. சுமார் சிவில் விவகார அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு மூலம் ரூ. 486,000/= ரூபாவும் மேலும், இந்த திட்டம் சுமார் ரூ. 2.4 மில்லியன் பெறுமதியானது 12 வது இலங்கை பொறியியல் படையணியின் படையினரால் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி 61 வது காலாட் படைபிரிவின் தளபதி மற்றும் 612 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் புதிய வீட்டை நிர்மாணித்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களுடன் 61 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எம்யு ஹேரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ எச்டிஎம்சீ பிஎஸ்சீ மற்றும் 612 வது காலாட் பிரிகேட் தளபதி எம்டபிள்யூஎஸ் மில்லகல ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். மேலும் இவர்கள் 612 வது காலாட் பிரிகேட் படையினருக்கு திட்டத்தின் வெற்றிக்கு தனது ஒத்துழைப்பை வழங்கினார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதி மற்றும் பல பங்கேற்பாளர்கள் பயனாளிகளுக்கு வீட்டுஉபகரணங்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அனுசரணையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.