12th June 2023 18:52:36 Hours
பலாலி இராணுவத் தள வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம் மற்றும் மருந்தகக் கட்டிடம் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதோட்ட ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களால் மே 29 அன்று திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழுள்ள பொறியியல் சேவைப் படையணியினரால் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திறப்பு விழாவில் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.