12th June 2023 18:49:36 Hours
தியத்தலாவ மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினர் பொசன் பண்டிகையை முன்னிட்டு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்களின் வழிகாட்டலில் பொசன் போயா தினத்தன்று (ஜூன் 03) தொடர்ச்சியான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.
தியத்தலாவ வர்த்தகர்கள் சங்கத்தின் ஒத்துழைப்புடன் தியத்தலாவ நகரில் அன்னதானம் வழங்கிய படையினர், ஹல்துமுல்ல பொது விளையாட்டரங்கில் பல பொசன் விளக்குகளை உள்ளடக்கிய ‘பொசன்’ வலயத்தை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், கும்பல்வெல மஹாமேவ்ன தியான நிலையத்தில் மற்றொரு பொசன் விளக்கு கண்காட்சியும் படையினரின கைவண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் ‘தர்ம பிரசங்கம் மற்றும் ‘போதி பூஜை’ உள்ளிட்ட மத அனுஷ்டானங்கள் நடத்தப்பட்டன. மத்தியபாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தொடர் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.