Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th April 2023 22:45:22 Hours

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புத்தாண்டு கொண்டாட்டம்

தம்புள்ளை 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் புத்தாண்டு தினத்தன்று (ஏப்ரல் 14) 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாம் வளாகத்திற்குள் 'பக்மஹா உலேல' (சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு) விழாவை அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் இணைந்து கொண்டாடினர்.

சறுக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், யானைக்கு கண் வைத்தல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல், பனிஸ் சாப்பிடுதல், தடைத்தாண்டல் ஓட்டம், தேசிக்காய் சமனிலை ஓட்டம், வினோத உடை போட்டி ஆகிய விளையாட்டுகள் அடங்கி இருந்தன.

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூடிடிஆர் வீரபுர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, அவர்கள் நிகழ்வை நடாத்துவதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.