Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st May 2023 20:55:32 Hours

தளபதியின் ஆன்மீக மேம்பாட்டுத் திட்டம் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திலும் ஆரம்பம்

<இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் முன்மொழியப்பட்ட ஆன்மீகத் திட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கிற்கு தனது தர்மச் செய்தியை எடுத்துச் செல்லும் பெலிஹுல்ஓய 'சீல சமஹித யோகாஷ்ரமய' பிரதமகுரு வண.பலாங்கொட ரத தேரர், முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 100 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சிப்பாய்களுக்கு ஏப்ரல் 25 அன்று தர்ம பிரசங்கத்தினை நடத்தினர்.

<படையினர்களிடையே தார்மீக மேம்பாடு மற்றும் ஆன்மீக புரிதலை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின் பேரில், ஆளனி நிர்வாக பணிப்பகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கம் இணைந்து தர்மா பிரசங்கத் தொடரை ஏற்பாடு செய்தனர்.

<துறவியின் சொற்பொழிவு நினைவாற்றல், மன ஆரோக்கியம், ஒழுக்க நடத்தை மற்றும் நல்வாழ்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியிருந்தது. இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர ஆடபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் முன்னெடுத்தனர்.