Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 21:14:28 Hours

யாழ் 52 வது காலாட் படைப்பிரிவின் ‘வெசாக்’ கொண்டாட்டம்

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் 52 வது காலாட் படைபிரிவு தலைமையகம் மற்றும் அதன் 521 மற்றும் 523 வது பிரிகேட்கள் வெசாக் அலங்காரங்களை அந்தந்த பகுதிகளில் காட்சிப்படித்தினர்.

மேலும், படைப்பிரிவு, பிரிகேட்கள் மற்றும் கட்டளை படையலகுகள், சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கமைய, அன்னதானம் வழங்கினர். அவற்றில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கேபிஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆலோசனையின் பேரில், சிறந்த வெசாக் கூடுகளை தெரிவசெய்வதற்கான நடுவர் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று இடங்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, பின்வரும் படைப்பிரிவுகள் பரிசுகளையும் விருதுகளையும் பெற்றன.

1ஆம் இடம் - 7 வது விஜயபாகு காலாட் படையணி

2 ஆம் இடம் - 11 வது இலங்கை பொறியியல் படையணி

3 ஆம் இடம் - 15 (தொ) கஜபா படையணி