09th May 2023 21:30:28 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் இராணுவ பௌத்த சங்கத்துடன் 'ஸ்ரீ சமன் மெத் சன்சதய' உறுப்பினர்கள் இணைந்து பனாகொட போதிராஜராமய இராணுவ விகாரையில் சர்வ ஞான புத்தரின் நினைவுச்சின்னங்கள் மற்றும் அவரது சீடர்களின் நினைவுச்சின்னங்களை மே 5-6 ம் திகதிகளில் புத்தபூர்ணிமா 'வெசாக்' தினத்தின் போது காட்சிப்படுத்தப்பட்டது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரி சமன் மெத் சன்சதய வின் வேண்டுகோளுக்கு இணங்க ஆரம்பிக்கப்பட்டதுடன் இத் திட்டம் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆசீர்வாதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் விகாரை சந்நிதியில் வைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்கள் பக்தர்கள் வழிப்பாடுகளை மேற் கொண்டனர். மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவரது பாரியார் திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல ஆகியோரின் பங்கேற்புடன் போதி பூஜையும் இடம் பெற்றது.
மாலை வேளையில் மே 06 பக்தர்களுக்காக கொத்தமல்லி பானம் அவ் இடத்தில் வழங்கப்பட்டது. இவ் விரண்டு நாட்களிலும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், ‘ஸ்ரீ சமன் மெத் சன்சதய’ பிரதிநிதிகள், சிப்பாய்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.