11th May 2023 19:05:47 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் வெசாக் கூடுகளை வடிவமைத்து மே 5 தொடக்கம் 8 வரை குருநாகல் ஹெரலியவல முகாம் வளாகத்தில் காட்சிப்படுத்தினர்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலையத் தளபதி இணைந்து வழங்கிய வழிகாட்டுதலின் கீழ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் எச்ஏ கீர்த்திநாத ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தனித்தனி படையலகுகளாக வழங்கப்பட்ட அந்த புதுமையான மற்றும் வண்ணமயமான அலங்காரங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.
இக் காலகட்டத்தில், பார்வையாளர்களுக்கு வில்வ பானம் வழங்கப்பட்டதுடன், பிற்பகல் ஒரு பக்தி பாடல்களும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் இடம் பெற்றது.