Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th May 2023 19:25:47 Hours

'வெசாக்' தினத்தன்று 58 வது படைப்பிரிவினரால் உயிர் நீத்த போர் வீரர்களுக்கு நினைவஞ்சலி

வெசாக் தினத்தில் (மே 05) 58 வது படைப்பிரிவினர் 'வெசாக்' பண்டிகையை முன்னிட்டு விசேட படையணியில் 2009 மே மாதத்திற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வீரமரணமடைந்த போர்வீரர் மேஜர் சேபால தஹநாயக்க அவர்களின் நினைவாக 3 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

உயிரிழந்த போர் வீரரின் தாயார் திருமதி சாரா யாப்பா அவர்கள் நினைவேந்தல் தினத்தில் முதலில் பசு ஒன்றை விடுவித்தார். 58 வது காலாட் படைப்பிரிவின் ஒருங்கிணைப்பில் முகாமுக்கு அழைக்கப்பட்ட மகா சங்க குழுவிற்கு தானம் வழங்கப்பட்டது. அத்துடன் அனைத்து படையினர்களுக்கும் ஆசீர்வதம் வழங்கப்பட்டதுடன், மாலை வேளையில் புத்தளம் 'அபயராம' விகாரையில் புத்தரின் புதிய சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அபயராம விகாரையில் பூஜையும் இடம் பெற்றது.

58 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடிடபிள்யூஜி இஹலகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் முகாம் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 'வெசாக்' கூடுகள் மற்றும் அலங்காரங்களை ஒளியூட்டினார். இத் திட்டமானது 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டுதல்களின்படி அனைத்து ஏற்பாடுகளும் நெறிப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்பட்டன.