09th June 2023 19:17:36 Hours
இனாமலுவ 1 வது படைப்பிரிவின் 53 வது காலாட் படைப்பிரிவின் படையினர், பிரதேசத்தில் முதன்முறையாக வாயு துப்பாக்கி சுடுதல் கழகத்தையும் உள்ளூர் மக்களின் நலனுக்காக சிறுவர் பூங்காவையும் செவ்வாய்க்கிழமை (மே 30), இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைத்தனர்.
இரண்டு திட்டங்களும் ஹபரணை, திகன்பதஹா மற்றும் இனாமலுவ பிரதேசங்களில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு பயனளிக்கும் சிவில் இராணுவ ஒத்துழைப்பு திட்டமாக 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் கருத்தின்படி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சிறுவர் பூங்காவிற்கு தேவையான நிதி உதவியின் ஒரு பகுதியை 53 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் ஒருங்கிணைப்பின் மூலம் ஒரு அனுசரணையாளரினால் வழங்கப்பட்டது.
மேலும், திகன்பதஹாவில் உள்ள கிட்ஸ் வேர்ல்ட் முன்பள்ளியில் 90 சிறுவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சிறுவர் பூங்கா திறப்பு விழாவிற்கு வருகை தந்ததுடன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களுக்கு சொக்லேட் மற்றும் பானங்களை வழங்கினார். மேலும், 53 வது காலாட் படைப்பிரிவு படையினர் அந்த பிள்ளைகளுக்கு சுவையான சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கினர்.
இந்நிகழ்வில் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ,கொமான்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரத்நாயக்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.