10th June 2023 17:36:21 Hours
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு (ஜூன் 05) இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் படையினர் வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் 02 அதிகாரிகள் மற்றும் 47 படையினரின் பங்கேற்புடன் கடற்கரையை சுத்தப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்தனர்.
இத் திட்டம் கடல் வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பக பணிப்பாளர் நாயகமும், இராணுவப் பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டீ சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.