Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 21:10:31 Hours

இராணுவ பயிற்சி பாடசாலையில் மாணவர் அதிகாரிகளுக்கு வெசாக் தின தர்ம பிரசங்கம்

மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி பாடசாலையில் கிளர்ச்சி மற்றும் வன போர் பாடநெறி - 32 மற்றும் இளம் அதிகாரி பாடநெறி - 68 எ ஆகியவற்றைப் பின்பற்றும் அதிகாரிகளுக்கு மே 6 ம் திகதி வண. கடவத்த சோபிதவலன்சாகர தேரர் அவர்களால் 'தர்ம' பிரசங்கம் வழங்கப்பட்டது.

வெசாக்குடன் இணைந்த பிரசங்கமானது, 'தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் புத்தரின் தத்துவத்திற்கு ஏற்ப வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது' என்ற பௌத்த வழியை மையமாகக் கொண்டிருந்தது.

இராணுவ பயிற்சி பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.