28th April 2023 19:30:22 Hours
இராணுவத் தலைமையகத்தில் உள்ள ஒழுக்க பணிப்பகம், 'இராணுவ பொலிஸ் மற்றும் அதன் பணிகள்' என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் அதிகாரிகளுக்கான விரிவான செயலமர்வை ஏப்ரல் 26 அன்று நடாத்தியது.
ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஏ டி செய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சீ அவர்கள் இராணுவ பொலிஸ் அதிகாரிகளுக்கு விரிவுரையை நிகழ்த்தினார்.
இராணுவ பொலிஸ் பயிற்சி பாடசாலையின் தளபதி, அந்தந்த படையணிகளின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் செயலமர்வில் பங்கேற்றினர்.