Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th May 2023 18:05:46 Hours

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ‘போதைப் பொருள் தடுப்பு’ பற்றிய செயலமர்வு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர், புதன்கிழமை (மே 10) தியத்தலாவை டோர்ச் திரையரங்கில் நடாத்தப்பட்ட ‘சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் போதைப் பழக்கத்தைத் தடுப்பது’ பற்றிய விழிப்புணர்வு விரிவுரையில் கலந்து கொண்டனர்.

இராணுவத் தலைமையகத்தில் உளவியலாளர் மற்றும் தடுப்பு மருத்துவம் மற்றும் மனநல சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் (டாக்டர்) ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ அவர்களால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.

அவருக்கு இரண்டு தொழில் வல்லுநர்கள் உதவியதுடன், அவர்கள் சட்டவிரோதமான பொருட்கள் மற்றும் ஆபத்தான போதைப் பொருள்களின் பயன்பாடு, இத்தகைய பயன்பாடுகளின் தாக்கம் மற்றும் விளைவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இராணுவ அமைப்புக்கள், பயிற்சிப் பாடசாலைகள் மற்றும் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 அதிகாரிகள் மற்றும் 300 சிப்பாய்கள் அமர்வுகளில் கலந்துகொண்டனர்.