22nd May 2023 16:30:03 Hours
இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியில் புதிதாக இணைக்கப்பட்ட 93 சிப்பாய்களுக்கான அடிப்படை பாடநெறி இல-82 ன் விடுகை அணிவகுப்பு சனிக்கிழமை (மே 13) கிரித்தலையில் உள்ள இராணுவ பொலிஸ் படையணி பயிற்சிப் பாடசாலையில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உறவினர்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ பொலிஸ் படையணியின் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முன்னரங்க பராமரிப்பு பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎல் இளங்ககோன் கலந்து கொண்டார்.
அதே சந்தர்ப்பத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பின்வருவோர் விருது பெற்றனர்.
இரண்டாம் லெப்டினன் டபிள்யூஎம்ஜிகே விஜேசுந்தர சிறந்த குழு கட்டளையாளராகவும், சிப்பாய் எம்ஏடிடி முனசிங்க பாடநெறியில் சிறந்தவருக்கான விருதும் பெற்றனர்.