Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2023 17:44:52 Hours

4 வது இலங்கை கவச வாகனப் படையணி வெற்றி தினத்தில் தமது வகிப்பங்கு தொடர்பான செயலமர்வு

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் 'மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றியை நினைவுகூரும் வகையில் போர்வீரர்களின் நினைவாக, , 4 வது கவச வாகன படையணி என்ற தலைப்பிலான செயலமர்வு வெற்றி தினமான (மே 19) திருகோணமலை கிளப்பன்பேர்க் முகாமில் இடம்பெற்றது.

4 வது இலங்கை கவச வாகன படையணியின் போரில் உயிரிழந்த அனைத்து போர் வீரர்களையும் நினைவுகூர்ந்து அன்றைய பயிற்சித் திட்டம் ஆரம்பமானது.

2006-2009 காலப்பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது இலங்கை கவச வாகன படையணியின் படையினர் பெருமளவில் ஆற்றிய பங்கு தொடர்பாக இச் செயலமர்வில் பயிற்சியளிக்கப்பட்டது. இப் பயிற்சி நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.