26th May 2023 11:05:08 Hours
படையணி தலைமையகங்களின் விளையாட்டு வீர வீராங்கனைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், 'விளையாட்டு உளவியல்' தொடர்பான செயலமர்வு (மே 19) அன்று இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை இராணுவ விளையாட்டு சம்மேலனம் இராணுவ விளையாட்டு வீர வீராங்கனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் மன உறுதியையும் உளவியல் திறனையும் உயர்த்துவதற்காக இச்செயலமர்வு நடாத்தப்பட்டது.
விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பீஎஎம் பீரிஸ் அவர்களின் ஏற்பாட்டில், இராணுவ விளையாட்டுக் வீர வீராங்கனைளுக்காக செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை இராணுவ விளையாட்டு சம்மேலன அமர்வின் போது நீச்சல், குத்துச்சண்டை, டேக்வாண்டோ, கயிறு இழுத்தல், தடகளம் மற்றும் கராத்தே உள்ளிட்ட விளையாட்டுக்களுடனான "உடல் திறன்களுடன் இணைந்த விளையாட்டுகளின் உளவியல் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்" “காயங்கள் ஏற்படுவதைத் தடுப்பதன் முக்கியத்துவம்" ஆகிய தலைப்புகளில் விரிவுரைகள் நடத்தப்பட்டன. விளையாட்டு உடல் தொடர்பான நிபுணர் மேஜர் டபிள்யூஎகேபீஎஸ் பண்டார மற்றும் இராணுவ விளையாட்டு மேம்பாட்டின் விளையாட்டு மருத்துவப் பிரிவின் கெப்டன் ஓடிஎஸ்கே ருபஸ்ரீ ஆகிய இருவரும் செயலமர்வை நடாத்தினர்.
படையணி தலைமையகத்தின் பல விளையாட்டுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 130 விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் விளையாட்டுக் குழுக்களின் பிரதிநிதிகளும் இச் செயலமர்வில் கலந்து கொண்டனர்.