Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th May 2023 11:06:13 Hours

'தந்திரோபாய சந்திப்புகளில் ஊடகங்களை எவ்வாறு ஈடுபடுத்துவது' பற்றி கஜபா அதிகாரிகளுக்கு அறிவூட்டல்

கஜபா படையணியின் இரண்டாம் காலாண்டுக்கான அதிகாரிகள் பயிற்சி தினத்தின் போது, ஊடக பணிப்பகத்தின் கேணல் ஊடகம் கேணல் எஎம்டிபி அதிகாரி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சாலியபுர கஜபா படையணியில் மார்ச் (26) அன்று ‘தந்திரோபாய சந்திப்புகளில் ஊடகங்களை எவ்வாறு ஈடுபடுத்துவது’ என்ற தலைப்பில் விரிவான செயலமர்வை நடத்தினார்.

அவர் செயலமர்வின் போது, 'தற்கால சூழலில் குறிப்பாக சமூக ஊடகங்களில் ஊடக நடத்தை', 'நிறுவன நடத்தை மற்றும் கலாசாரத்தில் அதன் தாக்கங்கள்', 'நிறுவன ஒருங்கிணைப்புக்கு எதிர்மறை மற்றும் நேர்மறையான தாக்கம் மற்றும் எதிர் பிரச்சினைகள் என்ன' என்ற தலைப்பில் அறிவூட்டலை வழங்கினார்.

பயிற்சி நாள் செயலமர்வில் 100க்கும் மேற்பட்ட கஜபா அதிகாரிகள் கலந்து கொண்டனர்.