Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st May 2023 20:02:54 Hours

இராணுவ கணக்கியல் அதிகாரிகள் மற்றும் கணக்காய்வு ழிகிதர்கள் நிதி அமைச்சின் நிபுணத்துவ அறிவைப் பெறல்

இராணுவத் தலைமையகத்தின் உள்ளக கணக்காய்வு பணிப்பகம், நிதியமைச்சின் அதிகாரிகளிடமிருந்து நிபுணத்துவத்தைப் பெறும் நோக்கத்துடன் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (மே 23 மற்றும் 24) கணக்கியல் அதிகாரிகள் மற்றும் கணக்காய்வு ழிகிதர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி, நிதியமைச்சின் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி எஸ்ஏ சந்திரா குலதிலக்க மற்றும் நிபுணர்கள் குழு இரண்டு நாள் செயலமர்வை நடாத்தினர். 99 அதிகாரிகளும் 217 சிப்பாய்களும் இதில் கலந்துகொண்டனர்.

இராணுவ நிதி முகாமைத்துவம் பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவரின் கருத்திற்கமைய இச்செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

கணக்காய்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் கேணல் டி உதயகுமார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செயலமர்வின் முடிவில், நிதி முகாமைத்துவம் பணிப்பாளர் நாயகம் அவர்களால், திருமதி எஸ்எ சந்திரா குலதிலக்க அவர்களுக்கு இராணுவத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு சிறப்புப் பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது. இரண்டு நாள் பயிற்சி அமர்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் பங்கேற்றனர்.