03rd June 2023 00:03:50 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 64 வது காலாட் படைப்பிரிவின் 14 வது இலங்கை சிங்கப் படையணி வளாகத்தில் ஏப்ரல் 24 முதல் மே 30 வரை முல்லைத்தீவு படையினருக்கான தற்காப்பு பயிற்சி நெறி நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 8 வது இலங்கை பீரங்கி படையணி, 14 வது இலங்கை சிங்கப் படையணி, 23 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 17 வது (தொ) கஜபா படையணிகளிலிருந்து 32 சிப்பாய்கள் பங்கு பற்றினர்.
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், தேசிய முய் தாய் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் எச்டீடபிள்யூகேஎன் எரியகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் கருத்துப்படி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, இலங்கை இராணுவ முய் தாய் குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜேஎம்எஸ்ஜிபி ஜயமஹா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இரண்டாம் லெப்டினன் எம்ஏடிடீ மல்லவகே மற்றும் பயிற்றுனர் குழுவினால் இந்த பாடநெறி நடாத்தப்பட்டது.
பாடநெறியின் நிறைவு விழாவில், 64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பங்கேற்பாளர்களின் முன்வைப்புக்களை பார்வையிட்ட பின்னர் சான்றிதழ்களை வழங்கினார்.