Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2023 00:17:34 Hours

இலங்கை சிங்கப் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு செயலமர்வு

அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் மே 18 தொடக்கம் 25 வரை சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு நம்பிக்கையுடனும், அமைப்பின் மேம்பாட்டுடனும் சிறப்பாகச் செயல்படும் நோக்கத்துடன், சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு ஒரு வார கால பயிற்சி செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உபகரண பணிப்பாளர் நாயகமும், இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இத்திட்டத்தை இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் சிஎஸ் திப்பொட்டுகே அவர்கள் மேற்பார்வையிட்டார்.

அதன்படி, படையணி வரலாறு, சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பொறுப்புகள், தலைமைத்துவம், அணிநடை, இராணுவ சட்டம், சமூக நெறிமுறைகள், மருத்துவம் மற்றும் ஏனைய விடயங்கள் இந்தப் பயிற்சி அமர்வு உள்ளடக்கப்பட்டிருந்தது.

இலங்கை சிங்கப் படையணியின் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் இலங்கை சிங்கப் படையணியின் நிலையத் தளபதி அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் பணிநிலை அதிகாரிகள், பாடநெறி பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.