07th June 2023 21:00:27 Hours
புத்தல இராணுவப் போர்க் கல்லூரியில் 2023 ம் ஆண்டின் இரண்டாவது தடவை வெள்ளிக்கிழமை (ஜூன் 02) விரிவுரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
பொதுபணி பணிப்பாளர் நாயகமும், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள், பிரதம அதிதி பேச்சாளராக கலந்து கொண்டு ‘இராணுவ நிபுணத்துவம் மற்றும் அலங்காரம் தொடர்பாக ஒரு அதிகாரியாகவும், புதிய மனிதராகவும் இருக்க வேண்டும்’ என்ற தலைப்பில் விரிவான விரிவுரையை நிகழ்த்தினார்.
இவ் விரிவுரையில் இராணுவ போர் கல்லூரியின் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர், கேள்விகள் மற்றும் பதில் அமர்வில், இராணுவ வாழ்க்கை மற்றும் தொழில்முறை தொடர்பான சந்தேகங்களை மாணவ அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தினார்.
இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் வைஎபிஎம் யாம்பத் ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, தலைமைப் பயிற்றுவிப்பாளர், சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஏனைய பயிற்றுவிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.