17th April 2023 18:20:02 Hours
சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப்பிரிவின் 231 வது காலாட் பிரிகேடின் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர், மட்டக்களப்பு கெவிலியமடு பொது சுகாதார குடும்பநல அலுவலகத்தை புணரமைத்து ஏப்ரல் 07 அன்று வழங்கிவைத்தனர் “அபி மனுஸ்ஸயோ” அறக்கட்டளையின் அமைப்பாளர்களான திரு. தனோஜ் பியகம மற்றும் திரு. நதீர கஹாபிட்டிய ஆகியோர் இந்த திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்கினர்.
231 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎம்என்கேடி பண்டார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர் பொது சுகாதார குடும்பநல அலுவலக புணரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
அன்றைய பிரதான நிகழ்வு நிறைவடைந்ததையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் பிள்ளைகளுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதேவேளை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 ஊனமுற்ற நபர்களுக்கு 4 சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டன.
231 வது காலாட் பிரிகேட் தளபதி, 231 வது காலாட் பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, படிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி, கொஹொபகஸ்தலாவ பொது சுகாதார குடும்பநல அதிகாரி, 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினர், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் மற்றும் பிள்ளைகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.